முகநூல் சேவை ஒரு மணி நேரம் முடக்கம்..!

830

பேஸ்புக் எனப்படும் முகநூல் சேவை நேற்று ஒரு மணி நேரம் முடங்கியதால், வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.

முகநூல், கட்செவி உள்ளிட்ட இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உலக முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் புதிய சேவைகளை இணையதளங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக முகநூல் பயன்படுத்துவதை இளைஞர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தநிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் முகநூல் சேவை நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை திடீரென முடங்கியது.

இந்தியாவில் மட்டுமின்றி, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலும் முகநூல் இயங்கவில்லை. முடங்கியதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், ஹேக்கர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்ற அஞ்சப்படுகிறது.