கல்வாயில் மிதந்து வந்த ஆண் சடலம்..!

188

மேட்டூர் அணை கல்வாயில் மிதந்து வந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியிருந்தது. தண்ணீரில் இருந்த மீட்ட கிராம மக்கள் காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கால்வாயில் ஒருவர் மர்மமான உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.