மேட்டூரில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது..!

144

மேட்டூரில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் பண்ணவாடி நீர்தேக்கப் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் பிரேதம் மிதந்தது. இதனை பார்த்தவர்கள் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் கொளத்தூர் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையில் பழனியம்மாளுக்கும், இவரது வீட்டின் அருகாமையில் இருந்த நபர்களுக்கும் முன்விரோதம் இருந்துள்ளதாகவும், இதனால் பழனியம்மாளை கொலை செய்து உடலில் கல்லைக் கட்டி ஆற்றில் வீசி சென்றதாகவும் தெரியவந்தது. இதனடிப்படையில் வெள்ளையன், மாதப்பன் மற்றும் சுப்ரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மூவரையும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.