மலைகோவிலை சுற்றிப் பார்க்க சென்ற கல்லூரி மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு..!

121

விழுப்புரம் அருகே மலைகோவிலை சுற்றிப் பார்க்க சென்ற கல்லூரி மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விழுப்புரம் அண்ணா அரசினர் கல்லூரியில் படித்துவந்த மாணவர்கள் சுந்தர்ராஜ், சுவேதா, ஜெனிபர் ஆகியோர் அனந்தபுரம் என்ற இடத்துக்கு அருகிலுள்ள மலைக்கோவிலை நேற்று சுற்றிப்பார்க்க சென்றனர். அப்போது குளத்தில் இருந்த பாசியின் காரணமாக கால்கள் வழுக்கி சுவேதாவும், ஜெனிபரும் குளத்தில் விழுந்து மூழ்கினர். அதிர்ச்சியான சுந்தர்ராஜ் அவர்களை காப்பாற்ற உடனே குளத்தில் குதித்தார். துரதிர்ஷ்டவசமாக சுந்தர்ராஜூம் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கதறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த அப்பகுதி மக்கழ் அங்கு வந்து, மூவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ஜெனிபரை மட்டும் அவர்களால் காப்பாற்ற முடிந்தது. தகவலறிந்து அங்குவந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை முண்டியம்பாக்கம் அரசு மரு்ததுவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.