தேர்தல் ஆணையத்தில் அமமுக தனிக்கட்சியாக பதிவு

323

டெல்லி தேர்தல் ஆணையத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தனிக்கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் சில நாட்களுக்கு முன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தனிக்கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும் ,கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க உள்ளதாகவும் அறிவித்தார். இதனையடுத்து, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை தனிக்கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என தினகரன் விண்ணப்பம் அளித்துள்ளார். இந்த நிலையில், அமமுக தனிக்கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அமமுக தொண்டர்கள் உற்சாகத்துடன், தனிக்கட்சியாக பதிவு செய்யப்பட்டதை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.