தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள் முடக்கம்!

1760

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் 21 பெயர்களில் பாகிஸ்தானில் நடமாடுவதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார். அவரை இந்தியாவுக்கு அனுப்புமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் பாகிஸ்தான் அரசு செவி சாய்க்கவில்லை. மேலும், தாவூத் இப்ராஹிம் தங்கள் நாட்டில் இல்லை என்றும் பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் நிதியமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நிதி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதில், 21 பெயர்களில் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் நடமாடுவதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது பெயர்களில் உள்ள அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.