கருகும் பயிர்களை காப்பாற்ற கபினி அணையை திறக்க முடிவு..!

700

கருகும் பயிர்களை காப்பதற்காக கர்நாடகாவில் உள்ள கபினி அணையை திறக்க மன்னார்குடியிலிருந்து விவசாயிகள் இன்று வாகனங்களில் எழுச்சி பயணம் செல்ல உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.தமிழகத்தில், காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தற்போது 18 லட்சம் ஏக்கரில் காவிரி நீரை நம்பி ஒருபோக சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இதில் 5 லட்சம் ஏக்கரில் தண்ணீரின்றி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் கருக துவங்கிவிட்டது. பயிரை காப்பாற்ற கர்நாடக அரசிடமிருந்து தண்ணீர் பெற்று தருவதற்காக, டெல்டா விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழகத்தில் கருகும் சம்பா பயிரை காப்பதற்காக, கர்நாடக மாநிலம் கபினி அணையை திறக்க, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி காந்தி சிலையிலிருந்து இன்று காலை வாகனங்களில் எழுச்சி பயணம் புறப்படுவதாக தெரிவித்துள்ளார்.