மேகதாது அணை கட்டுவது தொடர்பான செயல்திட்ட அறிக்கை : கர்நாடக அரசு மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது

428

மேகதாது அணை கட்டுவது தொடர்பான செயல்திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.

பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக காவிரியின் குறுக்கே மேகதாது திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கர்நாடக அரசு கூறிவருகிறது. இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறையும் என தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேகதாது அணை தொடர்பான செயல்திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளது. அதில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு தமிழகம் மற்றும் கேரள அரசுகளை மத்திய நீர்வள ஆணையம் கேட்டு கொண்டுள்ளது. இதற்கிடையே மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, மேகதாது பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தமிழகம் மற்றும் கர்நாடக முதலமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.