அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு..!

769

பெரியாறு பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைகை அணையிலிருந்து 20ம் தேதி முதல் 120 நாட்களுக்கு வினாடிக்கு 1130 கனஅடி நீர் திறந்துவிடப்படும் என தெரிவித்துள்ளார். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என குறிப்பிட்டுள்ள பழனிசாமி, வேளாண் பெருங்குடி மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.