தமிழக அரசு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் அறிவுரை..!

291

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர் மழை காரணமாக முல்லை பெரியாறு அணை 142 அடியை எட்டியுள்ளது. இதனை 139 அடியாக குறைக்கக் கோரி கேரளா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையில் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க சாத்தியக் கூறுகள் உள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பொதுமக்கள் நலன் கருதி கேரளாவின் கோரிக்கையை தமிழக அரசு பரசீலிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர். மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு மற்றும் அணையின் துணை கண்காணிப்புக்குழு இது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

குழு எடுக்கும் முடிவை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்து 24ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் படி தமிழக அரசு செயல்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.