நீலகிரி மாவட்ட அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு..!

207

கோபிசெட்டிபாளையம் அருகே பாவனி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 500க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின.

பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால், பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரியகொடிவேரி, நஞ்சைபுளியம்பட்டி, அடசப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள சூழ்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

அவர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. பெருந்தலையூர் பாலத்தின் மேற்பரப்பு முழுவதும் வெள்ளநீர் செல்வதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.