பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பு..!

369

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கான நீரை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியதை தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று பவானிசாகர் அணையின் மதகுகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்து நீருக்கு மலர் தூவினர்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். 120 நாட்களுக்கு திறக்கப்படும் நீரின் மூலம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.