தலித் வீட்டில் உணவு சாப்பிட்டு, யோகி ஆதித்யநாத் அரசியல் நாடகம் நடத்துவதாக, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

225

தலித் வீட்டில் உணவு சாப்பிட்டு, யோகி ஆதித்யநாத் அரசியல் நாடகம் நடத்துவதாக, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து அங்குள்ள தலித் குடும்பங்களுடன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உணவு உண்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாயாவதி, தலித் மக்களை தாங்கள் வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்பது போன்ற மாயத் தோற்றத்தை பாஜக அரசு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாகவே, கோரக்பூரில் தலித் மக்களுடன் இணைந்து யோகி ஆதித்யநாத் உணவு அருந்தியிருப்பதாக கூறிய அவர், இது முழுக்க முழுக்க அரசியல் நாடகம் என்று குறிப்பிட்டார். இதனை தலித் மக்கள் நன்றாக அறிவார்கள் என்றும், சஹாரன்பூரில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாயாவதி குற்றம்சாட்டினார்.