புயல் குறித்து முறையாக அறிவித்திருந்தால் மீனவர்கள் காணாமல் போவதை தடுத்திருக்கலாம்-திருநாவுக்கரசர்!

233

புயல் குறித்து முறையாக அறிவித்திருந்தால் மீனவர்கள் காணாமல் போவதை தடுத்திருக்கலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடலுக்குள் இருக்கும் மீனவர்கள் ஒவ்வொரு நிமிடமும் உயிருக்கு போராடி வருவதாகவும், அவர்களை மீட்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும் கேரள அரசு, மீனவர்களை மீட்க போர்கால அடிப்படையில் பணியை மேற்கொள்வதாகவும் ஆனால் தமிழக அரசு கால தாமதமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக வேட்பாளர் பல ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என உறுதி படத் தெரிவித்தார்.