டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்..!

243

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. காவிரியில் இருந்து உரிய நீரை பெற்று தர தமிழக அரசு வலியுறுத்தும் என தெரிகிறது.

தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுவை மாநிலங்கள், காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது, அணைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

தமிழக பிரதிநிதியாக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் பங்கேற்கிறார். காவிரியில் இருந்து உரிய தண்ணீரை பெற தமிழக அரசு வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயத்தில், மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடக குரல் எழுப்பும் என கூறப்படுகிறது. இன்று கூடும் ஆணையத்தின் மூலம் காவிரியில் இருந்து உரிய தண்ணீர் திறக்கப்படுமா என தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.