திருச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 சுங்கத்துறை அதிகாரிகள் உட்பட 6 பேரை ஆகஸ்டு 16 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 5-ம் தேதி திருச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தல் தொடர்பாக வந்த புகாரை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சுங்கத்துறை அதிகாரிகளான வெங்கடேசலு, கலுக்காசல மூர்த்தி, ராமகிருஷ்ணன், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தமயந்தி, தேவக்குமார், முத்துக்குமார் உள்ளிட்ட 6 பேரும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி 6 பேரையும் ஆகஸ்டு 16 ஆம் தேதி வரை விசாரிக்க உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர்களை மதுரை மற்றும் திருச்சியை தவிர வேறு எங்கும் அழைத்து செல்லக்கூடாது எனவும், அடித்து துன்புறுத்தக்கூடாது எனவும் அவர் நிபந்தனை விதித்தார்.