கம்பம் அருகே வீட்டில்பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஒருவரை கைது செய்தனர்.

175

கம்பம் அருகே வீட்டில்பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஒருவரை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே தாத்தப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், இவர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவுக்கு கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாத்தப்பன்குளம் பகுதியிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் நடத்திய சோதனையில் பிரபாகரன் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 3 ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட பிரபாகரனை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.