கம்பம் அரசு மருத்துமனை அருகே தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்தமுயன்ற ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

250

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை அருகே உணவு கடத்தல் தடுப்பு மற்றும் பறக்கும் படை வருவாய் ஆய்வாளர் மணிக்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கேரளா அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 600 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதனிடையே ரேசன் அரிசியை கடத்தி வந்தவர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்து கடத்தியவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.