குற்றம் செய்த ஒருவரும் தப்பக் கூடாது, நிரபராதி யாரும் தண்டிக்கப்படக் கூடாது…

483

குற்றம் செய்த ஒருவரும் தப்பக் கூடாது, நிரபராதி யாரும் தண்டிக்கப்படக் கூடாது என்று நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் நடிகை பாவனா, கைது செய்யப்பட்ட திலீப் உள்ளிட்ட மற்றவருக்கும் தனக்கும் எந்த தொடர்பில்லை என பதிவிட்டுள்ளார். ஊடகங்களுக்கு செய்தியளிக்கும் மன நிலையில் இல்லை என்று கூறியுள்ள அவர், பிப்ரவரி 17 முதல் பெரும் துன்பத்தை சுமந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளார். நடிகர் திலீபுடன் பல படங்களில் நடித்த போதும் தனக்கும் அவருக்கும் எந்த ஒரு பிரச்சினைகளும் இல்லை என்று பாவனா குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு குற்றமும் செய்யாத நிரபராதி ஒருவர் கூட தண்டிக்கப்படக்கூடாது என்றும், குற்றம் செய்த ஒரு கிரிமனலும் தப்பக் கூடாது என்றும் அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.