ஒரு தலைக்காதலால் விபரீத முடிவு | பல்கலைக்கழக வளாகத்தில் கழுத்தை அறுத்த சம்பவம்..!

1076

சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞர் ஒருவர் மாணவியின் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு வேலூரை சேர்ந்த லாவண்யா என்ற மாணவி இங்குள்ள விடுதியில் தங்கி வேளாண் முதுகலை விவசாயம் படித்து வருகிறார். இந்நிலையில் இன்று விடுதியில் இருந்து லாவண்யா வெளியே வந்த போது, வாலிபர் ஒருவர் திடீரென்று லாவண்யாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார். உடனே மாணவி கூச்சல்போட்டு அலறியதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். காயமடைந்த மாணவியை சக மாணவிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியை தாக்கிய வாலிபரை அங்கிருந்தவர்கள் பிடித்து அண்ணாமலை நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் மாணவியை தாக்கிய வாலிபர் லாவண்யா ஊரைச் சேர்ந்தவர் என்றும், அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஒரு தலையாக லாவண்யாவை காதலித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.