கடலூர் அருகே அரசுப்பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு ..!

195

கடலூர் அருகே அரசுப்பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து, குறிஞ்சிப்பாடி பணிமனையில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் சிலர் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதனால், பேருந்தின் ஒரு பக்கம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கண்ட பணிமனை ஊழியர்கள் தீயை அணைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஐஜி சந்தோஷ்குமார், மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் பேருந்தில் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் பெட்ரொல் குண்டு வீசிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.