திவ்யபாரதி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற கக்கூஸ் ஆவணப்படம் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் திரையிடப்பட்டது.

450

திவ்யபாரதி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற கக்கூஸ் ஆவணப்படம் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் திரையிடப்பட்டது.
இந்தியாவில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவல நிலை கடந்த பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. பல்வேறு தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த கொடுமை மட்டும் இன்னும் குறையவில்லை. இந்த அவலத்தை வெளிப்படுத்தும் வகையில், கக்கூஸ் என்ற ஆவணப்படத்தை திவ்ய பாரதி இயக்கி வெளியிட்டார். இது பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், கக்கூஸ் அவனப்படம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நூலக அரங்கத்தில் திரையிடப்பட்டுள்ளது. இது கக்கூஸ் படத்திற்கு உலகளவிலான அங்கீகாரத்தை அளித்துள்ளது.