ஐ.பி.எல் : இன்றைய கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதல்.

1002

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஜெய்ப்பூரில் இந்த லீக் போட்டி நடைபெறுகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களில், 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில், 2-வது இடத்தில் உள்ளது. இதனால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6-வது இடத்தில் இருப்பதால், எஞ்சிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு வாய்ப்பை எதிர்பார்க்க முடியும். சிறிய இடைவெளிக்குப் பின் சென்னை அணி விளையாடுவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.