சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 9 பேர் வீர மரணம் ..!

442

சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 9 பேர் வீர மரணம் அடைந்தனர்.
அசாம், சத்தீஷ்கர், ஒடிசா மாநிலங்களில் நக்சலைட்டுகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், சிறப்பு அதிரடி படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவர்கள் மீது நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் தொடுத்தனர். அவர்கள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் பாதுகாப்பு வாகனம் சிக்கி வெடித்து சிதறியது. இந்தத் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.