தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் ரயில்களில் மக்கள் கூட்டம். ரயில்களில் அதிக கட்டணமில்லாமல், கூடுதல் பெட்டிகளை இணைத்திட பயணிகள் கோரிக்கை.

270

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து, தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு மற்றும் கல்விக்காக சென்னையில் தங்கி வசித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையடுத்து, அவரவர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு சென்றனர். விடுமுறை முடிந்து சென்னை திரும்புவதற்காக காலையில் இருந்தே நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில், முன்பதிவு செய்யப்படாத இருக்கைக்காக ஏராளமானோர் காத்திருந்தனர். இதுபோன்ற பண்டிகை நேரங்களில், சிறப்பு கட்டண ரயில்களை விட கூடுதல் கட்டணமில்லா ரயில் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர்.