மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 10 கோடி நிதியுதவி : முதலமைச்சர் குமாரசாமி

239

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி 10 கோடி ரூபாய் நிவாரண உதவி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று திறக்கப்பட்டது. மழைக்கு 26 பேர் பலியாகியுள்ள நிலையில், பெரும் சேதம் ஏற்பட்டுள்ள கேரளாவில், பேரிடர் மீட்புப் படையினருடன், ராணுவ வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரிடரால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அம்மாநிலத்துக்கு நிவாரண உதவியாக 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் எனவும், கேரள மாநிலத்துக்கு தேவைப்படும் நிவாரணப் பொருள்களும் அனுப்பிவைக்கப்படும் என்றும் குமாரசாமி அறிவித்துள்ளார்.