குளத்தில் இருந்த 7 அடி நீளமுள்ள முதலையை பொதுமக்களே துணிச்சலாக பிடித்தனர்..!

483

ஒடிசாவில் குளத்தில் இருந்த 7 அடி நீளமுள்ள முதலையை பொதுமக்களே துணிச்சலாக மீட்டனர்.

ஒடிசா மாநிலம் மல்கான்காரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் முதலை ஒன்று இங்குள்ள குக்கிராமத்தில் உள்ள குளத்திற்குள் நுழைந்தது. இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் வராததால் பொதுமக்களே துணிச்சலாக குளத்தில் இறங்கி 7 அடி நீளமுள்ள முதலையை பிடித்து வெளியே கொண்டுவந்தனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் பிடிபட்ட முதலையை ஒப்படைத்தனர். பிடிபட்ட முதலை மார்ஷ் என்ற வகையைச் சேர்ந்தது என காவல்துறையினர் தெரிவித்தனர்.