இந்தியா-இலங்கை இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தடுமாற்றத்துடன் தொடக்கம்!

448

இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெறும் இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இலங்கை அணி 70 ஒவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. இந்திய அணி சார்பில் ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.