இந்தியா-இலங்கை இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் 205 ரன்களில் சுருண்டது இலங்கை அணி!

1185

இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 205 ரன்களுக்கு சுருண்டது.

மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெறும் இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணி தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடியது. இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல், இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களில் சுருண்டது. இந்திய அணி சார்பில் தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடியது. இன்றைய ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்களை எடுத்து இருந்தது.