கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய விவகாரம் : ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாழ்நாள் தடை விதிக்க வாய்ப்பு ..!

365

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதிக்க போவதாக கூறப்படுகிறது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித், பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் பூதாகரமாக கிளம்பியுள்ளது. . இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்திய விசாரணையில், பந்தை சேதப்படுத்தியதை ஸ்டீவன் ஸ்மித் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித்தும், துணை கேப்டன் பதவியிலிருந்து வார்னரும் நீக்கப்பட்டனர். மேலும் அந்த டெஸ்ட் தொடருக்கான அவரது சம்பளம் அனைத்தையும் அபராதமாக விதித்ததுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. ஆனால் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாழ்நாள் தடையும் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது . இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.