இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு..!

666

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கே அதிக வாய்ப்புள்ளது.

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 287 ரன்களில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 13 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இஷாந்த் சர்மா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் இந்தியா வெற்றி பெற 194 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2-வது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி வெற்றி பெற 84 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. 5 விக்கெட்கள் இழந்துள்ள நிலையில், இந்தியா 110 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.