ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாட புதுச்சேரி அணிக்கு பிசிசிஐ அனுமதி..!

821

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாட புதுச்சேரி அணிக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு பிசிசிஐ-ல் உறுப்பினர் பதவி இல்லாததால் அம்மாநில அணி ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் நிலவிவந்தது. இதனிடையே லோதா குழுவின் பரிந்துரையின்படி புதுச்சேரிக்கு அசோசியேட் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகளில் இனி புதுச்சேரி அணி பங்கேற்க முடியும். துத்திப்பட்டியில் புதுச்சேரி அணிக்காக கிரிக்கெட் மைதானமும் கட்டப்பட்டு வருகிறது.