இந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி : இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடரும் என ஐசிசி அறிவிப்பு

145

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடரும் என ஐசிசி அறிவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர். இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3 மணிக்கு மான்செஸ்டரில் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில், நிக்கோல்ஸ் சொற்ப ரன்களில் வெளியேறினர். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் வில்லியம்ஸ் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனையடுத்து, நியூசிலாந்து அணி 46 புள்ளி ஒரு ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால், இன்றைய தினத்திற்கு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று பிற்பகல் இந்திய நேரப்படி 3 மணிக்கு தொடங்கவுள்ளது. 46 புள்ளி ஒரு ஓவர் முடிந்த நிலையில், மீதமுள்ள 23 பந்துளை நியூஸிலாந்து அணி இன்று எதிர்கொள்கிறது.