உலகக் கோப்பை தொடரின், முதலாவது அரையிறுதி போட்டி : இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

344

உலகக் கோப்பை தொடரின், முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 45 லீக் ஆட்டம், 2 அரையிறுதி மற்றும் இறுதி சுற்று என 48 போட்டிகள் நடைபெறுகிறது. 45 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் முதல் 4 இடத்தை பெற்றுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மட்டும் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்தநிலையில், உலகக் கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி, இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணி அளவில் மான்செஸ்டரில் நடைபெறுகிறது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும், 4ஆம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஏற்கெனவே இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று இரு அணிகளும் அரையிறுதியில் மோதவுள்ளதால், ரசிகர்களிடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 11ஆம் தேதி நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுவது குறிப்பிடத்தக்கது.