5வது ஒரு நாள் போட்டி : ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

75

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை மூன்றுக்கு இரண்டு என்கிற கணக்கில் கைப்பற்றியது

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர் கவாஜா 106 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. 273 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர் ரோகித் சர்மா 56 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னனி வீரர்கள் சிகர்தவான், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கேதார் ஜாதவும் புவனேஸ்வர் குமாரும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். இருப்பினும் ஆஸ்திரேலியா பந்து வீச்சை சமாளிக்க முடியாத இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3க்கு 2 என்ற கணக்கில் கைப்பற்றியது.