இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் போட்டி | தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

84

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் போட்டி தலைநகர் டெல்லியில் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை, 2 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில், இந்திய அணி வெற்றி பெற்று 2 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஐதராபாத் மற்றும் நாக்பூரில் நடந்த முதல் 2 போட்டிகளிலும் அபாரமாக வென்ற இந்திய அணி 2 க்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெற்றது.

இந்திய அணி எளிதாக தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஞ்சி மற்றும் மொகாலியில் நடந்த அடுத்த 2 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றியை வசப்படுத்தி அதிர்ச்சி அளித்தது. இதனால் இரு அணிகளும் 2 க்கு 2 என சமநிலை வகித்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் கடைசி ஒரு நாள் தொடர் தலைநகர் டெல்லியில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஐசிசி உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச போட்டி என்பதால், தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது.