4-வது ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனிலை..!

92

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமனிலையில் உள்ளன.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து, ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களம் இறங்கினர். 17 புள்ளி 2 ஓவர்களில் 100 ரன்களை கடந்து இருவரும் தொடர்ந்து விளையாடினர். ரோகித் சர்மா 95 ரன்களுடன் ஆட்டம் இழந்தனர். இதனை தொடர்ந்து லோகேஷ் ராகுல் களம் இறங்கினார். தவான் அதிரடியாக ஆடி 143 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனையடுதது, ரிஷாப் பான்ட், விஜய் சங்கர் ஆகியோர் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களம் புகுந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் பின்னர் உஸ்மான் கவாஜாவும், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப்பும் இணைந்து தங்கள் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் 192 ரன்கள் திரட்டி அணிக்கு நம்பிக்கை அளித்தனர். உஸ்மான் கவாஜா 91 ரன்களிலும், அடுத்து வந்த மேக்ஸ்வெல் 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். டர்னரின் ஆக்ரோஷமான ஆட்டத்தினால், 84 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.