உலக கோப்பை போட்டியில் தோனி இடம் பெற வேண்டும் – கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்

166

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியில் தோனி கட்டாயம் இடம் பெற வேண்டும் என பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்,தோனி விக்கெட் கீப்பராக இருப்பதால் ஆட்டத்தின் போக்கை நன்கு கணிக்கக்கூடியவராக இருக்கிறார். அந்த பணியை அவர் இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு முன்பும் சிறப்பாக செய்து வந்திருக்கிறார் என்று தெரிவித்தார்.மேலும், இளம்வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் தோனி இருக்கிறார். உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தோனியின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்று யுவராஜ் வலியுறுத்தியுள்ளார்.