ஒரு நாள் கிரிக்கெட் தொடர் சிட்னியில் இன்று தொடக்கம்..!

97

சிட்னியில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் சமனில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் போட்டி தொடரை இந்திய அணி 2-க்கு1 என்ற கணக்கில் சொந்தமாக்கி புதிய வரலாறு படைத்தது.

இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. அதன்படி இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெறுகிறது. மே மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னோட்டமாக இந்த ஒரு நாள் தொடர் கருதப்படுவதால் இரு அணி வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்துவதில் தீவிரம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.