இந்தியா-ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் : பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறல்

104

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முக்கிய விக்கெட்களை இழந்து இந்திய அணி திணறி வருகிறது.

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. ஆலன்-பார்டர் கோப்பைக்கான இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் தடுமாற்றத்துடன் விளையாடினர். ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால், 21 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேறி வருகின்றனர். ஆவலுடன் எதிர்பார்த்த கேப்டன் கோலி 3 ரன்களுக்கு வெளியேறியதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.