3வது டி20 கிரிக்கெட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி

121

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 4 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 17 ரன்களிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

பிறகு ஷிகர் தவான் – ரிஷப் பந்த் ஆகியோர் ஜோடி சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். ஷிகர் தவான் 62 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார். இறுதியில், இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுடனான டி 20 தொடரை இந்தியா ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.