இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்..!

1108

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. காயத்தில் இருந்து குணமடைந்ததால் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்தப் போட்டியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இதே போல் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக இளம் வீரர் ரிஷாப் பாண்ட் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

தொடர் தோல்விகளால் இந்திய வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.