தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 28–வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி அணியை வீழ்த்தி தூத்துக்குடி அணி வெற்றி..!

118

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் காரைக்குடி காளை அணியை நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 28-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் காரைக்குடி காளை அணியும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய காரைக்குடி காளை, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் களமிறங்கியது. வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு இலக்கை எட்டியது. இதனால் காரைக்குடி காளை அணியை நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் இலக்கை எட்டாத காரணத்தால், ரன் ரேட் அடிப்படையில் தூத்துக்குடி அணி தொடரை விட்டு வெளியேறியது.