மெக்சிகோவில் நிகழ்ந்த விமான விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்பு..!

761

மெக்சிகோவில் நிகழ்ந்த விமான விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டுராங்கோ மாகாண விமான நிலையத்திலிருந்து ஏரோமெக்சிகோ நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மெக்சிகோ நகருக்கு வழக்கம்போல் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில மணிநேரத்தில் மோசமான வானிலை காரணமாக அவசரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் அருகே இருந்த நிலத்தில் விழுந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும் 80க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.