கோவை விமானநிலையத்தில் கடத்தி வரப்பட்ட 700 கிராம் தங்கத்தை பறிமுதல் : சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!

404

கோவை விமானநிலையத்தில் கடத்தி வரப்பட்ட 700 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளிலிருந்து சென்னை, திருச்சி விமான நிலையங்கள் வழியாக அதிகளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சார்ஜாவிலிருந்து கோவை விமானநிலையம் வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் 700 கிராம் தங்கத்தை காயத்துக்கு பயன்படுத்தப்படும் மருந்தில் கலந்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.