கிராமப்பகுதிக்குள் புகுந்த 7 காட்டுயானைகள் | வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

112

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கிராமப்பகுதியில் புகுந்த 7 காட்டு யானைகள் விளைநிலங்களையும் குடிசைகளையும் சேதப்படுத்தியுள்ளன.

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கிராமப்பகுதிக்குள் காட்டுப்பகுதியில் இருந்து வந்த 7 யானைகள் புகுந்தன. இந்த யானைகள் வயல் வெளிகளில் உள்ள வாழை, கரும்பு, நெல் ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளன. அங்குள்ள வீடுகளை சூறையாடியதுடன் வீட்டில் இருந்த உணவுப்பொருட்களை தின்றன. இதனால் அந்தப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீடுகளில் தங்க அச்சமடைந்துள்ளனர். காடுகளை அழித்து ஆக்கிரமிப்பு செய்ததால் இடம்பெயர்ந்து வரும் காட்டு யானைகளில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் தேக்கடியில் யானைகள் நலவாழ்வு முகாம் நடைபெற்று வரும் நிலையிலும் யானைகள் ஊருக்குள் புகுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.