கோவையில் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாய்பாபா காலனியில் வசித்து வரும் ஷாஜகான், நல்லாம்பாளையத்தில் மர அறுப்பு ஆலை நடத்தி வருகிறார். இந்தநிலையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை குறித்து விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் திடீரென இன்று காலை முதல் ஷாஜகானின் வீடு மற்றும் மர அறுப்பு ஆலையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பாளர் ராகுல், கூடுதல் கண்காணிப்பாளர் சவுகத் அலி ஆகியோர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். இதனால் கோவை நகரில் பரபரப்பு நிலவி வருகிறது.