ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்

453

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு பின்னர் இந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும், ஆலையை நடத்த அனுமதி கேட்டும், அந்த ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து ஏ.கே.கோயல் அமர்வு உத்தரவிட்டது.

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.