ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவை ரத்து செய்யக் கோரிய வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

214

ஓரினச்சேர்க்கையை குற்றச் செயலாக வரையறுக்கும் சட்டப் பிரிவை ரத்து செய்யக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஓரினச்சேர்க்கை அங்கீகரிக்கப்படாததால், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது குற்றச் செயலாகப் பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவு 377-ன் படி ஓரினச்சேர்க்கை என்பது குற்றத்துக்குரிய செயல் என வரையறுக்கப்பட்டுள்ளது. அந்தச் செயலின் தன்மையைப் பொருத்து 10 ஆண்டுகள் வரையோ அல்லது ஆயுள் சிறை தண்டனையோ விதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த சட்ட விதியை செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மறுபுறம் ஓரினச்சேர்க்கையை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தொடர்பான இறுதிகட்ட விசாரணையானது, கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.