விவசாய நிலங்களில் காற்றாலைகள் அமைக்க இடைக்கால தடை – மதுரை உயர்நீதிமன்றக் கிளை

322

தூத்துக்குடியில் நீர்நிலைகள், விவசாய நிலங்களில் காற்றாலைகள் அமைக்க இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து விதிமுறைகளை மீறி காற்றாலைகள் அமைக்கப்படுவதாகவும், இதற்கு தடை விதிக்கக்கோரியும், அருமைராஜன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை இன்று விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், தூத்துக்குடியில் நீர்நிலைகள், விவசாய நிலங்களில் காற்றாலைகள் அமைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றக்கிளை, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.